Published on : 26 May 2020 16:15 pm

பேசும் படங்கள்... (26.05.2020)

Published on : 26 May 2020 16:15 pm

1 / 33

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 60 நாட்களுக்கும் மேலாக அமலில் இருந்த ஊரடங்கின்போது... புதுச்சேரியில் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து கடந்த திங்கள்கிழமை முதல் புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் இன்று காலையில் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்ட ஒரு மதுபானக் கடை. படங்கள்: எம்.சாம்ராஜ்

2 / 33
3 / 33

கோடைக்காலத்துடன் இணைந்தே வருவது தண்ணீர் தட்டுப்பாடும்தான். இத்தருணத்தில் - புதுச்சேரி அரும்பார்த்தபுரம் சாலையில் பிளாஸ்டிக் குடங்களை விற்பனைக்கு எடுத்துசெல்கிறார்கள் வியாபாரிகள். படங்கள்: எம்.சாம்ராஜ்

4 / 33

தெலங்கானா மாநிலம்... வாரங்கல் மாவட்டத்தில் இருந்து... சரக்கு ரயில் மூலம் 2,600 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் காட்பாடி ரயில் நிலையத்துக்கு இன்று - கொண்டுவரப்பட்டன. இவை லாரிகள் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்குக்கு... எடுத்து செல்லப்பட்டன. படம்: வி.எம்.மணிநாதன்

5 / 33

கோயில்களைத் திறக்க வலியுறுத்தி... வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோயில் முன்பாக தோப்புக்கரணம் போராட்ட இந்து முன்னணியினர். படம்: வி.எம்.மணிநாதன்

6 / 33

நெசவாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முயற்சிக்கும் மத்திய, மாநில அரசை கண்டித்து... இன்று கோவை சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் முன்பாக - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமயில்சமூக இடைவெளியுடன் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. .படம் :ஜெ .மனோகரன்

7 / 33

கரோனா தொற்று தடுப்புக்காக அமலில் இருந்த ஊரடங்கு... சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்ட நிலையில்... தமிழக அரசு உடனே கோயில்களைத் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணியின் சார்பாக... இன்று - கோவை கோணியம்மன் கோயில் முன்பு... தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெற்றது. படம் : ஜெ .மனோகரன்

8 / 33

கோவை ரயில் நிலையத்தில் இருந்து இன்று சிறப்பு ரயில் மூலமாக அசாம் மாநிலத்துக்கு செல்லவிருந்த... வட மாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழக சுகாதாரத் துறையினர் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தனர். படம் : ஜெ .மனோகரன்

9 / 33

கோவை ரயில் நிலையத்தில் இருந்து இன்று சிறப்பு ரயில் மூலமாக அசாம் மாநிலத்துக்கு செல்லவிருந்த... வட மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு... தமிழக சுகாதாரத் துறையினர் முகக்கவசம் அணிவித்தனர். படம் : ஜெ .மனோகரன்

10 / 33

கோவை ரயில் நிலையத்தில் இருந்து இன்று சிறப்பு ரயில் மூலம் அசாம் மாநிலத்துக்கு செல்லக் காத்திருந்த வட மாநிலத் தொழிலாளர்கள் . படம் : ஜெ .மனோகரன்

11 / 33
12 / 33

விவசாயத்துக்கான - இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் திட்டத்தைக் கண்டித்து... வேலூர் அண்ணா சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி, வருமான வரித் துறை அலுவலகம் மற்றும் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள் : வி.எம்.மணிநாதன்

13 / 33
14 / 33
15 / 33

அடுத்து வரும் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று - வானிலை... அறிக்கை தகவல் சொன்னபோதும்... காலநிலை சில ஓவியங்களை வரைந்து விட்டு சென்றுவிடுகிறது. பாளையங்கோட்டையில் இன்று காலையில் ஆகாயத்தில் ஐஸ்க்ரீமைப் போல் மேகங்களை எழுந்த காட்சியும் அப்படித்தான் எழிலாக இருந்தது. படம் : மு. லெட்சுமி அருண்

16 / 33

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மே - 2 அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி... காட்பாடியில் உள்ள டான்பாஸ்கோ மெட்ரிக் பள்ளியில்... பிளஸ் 2 விடைத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். படம்: வி.எம்.மணிநாதன்

17 / 33
18 / 33

பிளஸ் - 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று (மே - 27) நடைபெற உள்ளதையொட்டி... காட்பாடியில் உள்ள டான்பாஸ்கோ மெட்ரிக் பள்ளி... பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் - முன்னேற்பாடாக வகுப்பு அறைகளை... மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர். படங்கள் : வி.எம்.மணிநாதன்

19 / 33
20 / 33

மதுரை மாவட்ட தட்டெழுத்து மற்றும் வணிகவியல் பள்ளிகள் நலச் சங்கம் சார்பாக... மீண்டும் வகுப்புகளைத் தொடங்கி நடத்த அனுமதிக்கக் கோரி... மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அச்சங்கத்தினர். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

21 / 33
22 / 33
23 / 33
24 / 33

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக - ஊரடங்கு அமலில் இருந்த காலகட்டத்தில் பல்லாவரத்தில் நடைபெற்று வந்த பாலம் கட்டுமானப் பணி... தடைப்பட்டுப் போயிருந்தது. தற்போது - சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில் பாலத்தின் கட்டுமான இறுதிப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இறுதிகட்டமாக பாலத்தின் வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. படம்: எம்.முத்துகணேஷ்

25 / 33
26 / 33
27 / 33
28 / 33

50 சதவீதத்துக்கும் மேல் கரோனா வரி விதிப்பு காரணமாக... மதுபானங்களின் விலை அதிகரித்துள்ளதை அடுத்து... சாராயத்தின் விலை குறைவாக உள்ளதால் மது அருந்துவோரில் பலர் இப்போது சாராயக் கடைகளுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். புதுச்சேரி - மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கடையொன்றில் சாராயம் வாங்க வந்திருந்த மது அருந்துவோர். படங்கள்: எம்.சாம்ராஜ்

29 / 33
30 / 33

நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகள்: வேலூரை அடுத்த பெருமுகைப் பகுதியான... சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று - விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சாலை சீரமைக்கும் பணி. படங்கள் : வி.எம்.மணிநாதன்

31 / 33
32 / 33
33 / 33

திருநெல்வேலி மாவட்ட மின்வாரிய அலுவலகம் முன்பு... திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்... விவசாயத்துக்கு வழங்கி வந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: மு. லெட்சுமிஅருண்

Recently Added

More From This Category

x